Connect with us

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் மனு பாக்கர்..!!

Featured

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் : துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் மனு பாக்கர்..!!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் இந்த முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக நடைபெறுகிறது.

விளையாட்டு வீரர்களின் கனவாக இருக்கும் இந்த ஒலிம்பிக் தொடரில் வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் என மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர்

இதில் இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்றிருக்கின்றனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் களம் கண்டுள்ளனர் .

இந்நிலையில் இந்த ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 ‘சூர்யா 47’ தமிழ்ப் படம் தான் – இயக்குநர் ஜித்து மாதவன் கொடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட்!

More in Featured

To Top