Connect with us

பாரிஸ் ஒலிம்பிக் : 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..!!

Featured

பாரிஸ் ஒலிம்பிக் : 2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..!!

2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் இம்முறை பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வியை சந்தித்து ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் இந்த முறை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது .

இந்த ஒலிம்பிக் தொடரில் இம்முறை வீராங்கனைகள் 5,250 பேர், வீரர்கள் 5,250 பேர் என மொத்தம் 10,500 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கின்றனர் . இதில் இந்தியா சார்பாக 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்றிருக்கின்றனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் களம் கண்டுள்ளனர் .

இந்நிலையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் தொடரில் நேற்று பாட்மிண்டன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை பிங் ஜியோவுடன் பி.வி.சிந்து மோதினார்.

ரசிகர்களின் ஆரவாரத்துடன் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 21 – 19, 21 – 14, என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

2 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பி.வி. சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் இம்முறை நிச்சயம் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோல்வியை சந்தித்து ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது சற்று ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top