Connect with us

சென்சார் மியூட்டுகள் இல்லாமல் ‘பராசக்தி’ – ரசிகர்கள் எதிர்பார்ப்பு 🎬🔥

Cinema News

சென்சார் மியூட்டுகள் இல்லாமல் ‘பராசக்தி’ – ரசிகர்கள் எதிர்பார்ப்பு 🎬🔥

பொங்கல் வெளியீடாக வந்த சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமான ‘பராசக்தி’, வெளியீட்டுக்கு முன்பே அதன் அரசியல் பின்னணி மற்றும் மொழிப் போராட்டத்தை மையமாக கொண்ட கதையால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், திரையரங்குகளில் வெளியாகும் முன், சென்சார் குழு படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு கட்டுகள் மற்றும் மியூட்டுகளை பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த திருத்தங்கள் இன்றி படம் வெளியானால் தாமதம் ஏற்படும் என்பதால், சென்சார் அறிவுறுத்தல்களை ஏற்று படம் குறிப்பிட்ட தேதியில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு, கடந்த பிப்ரவரி 7-ம் தேதி ‘பராசக்தி’ ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகியது. ஓடிடி வெளியீட்டின் பின்னர், படம் புதிய கவனத்தை பெற்றது. வெளியான இரண்டே நாட்களிலேயே, படம் ஒரு கோடி நிமிடங்களுக்கு மேல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டதாக கூறப்படுவதால், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் மியூட் செய்யப்பட்ட வசனங்களை அனைத்தையும் இணைத்து, ‘பராசக்தி’யின் அன்-கட் வெர்ஷன் விரைவில் ஓடிடியில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த அன்-கட் பதிப்பு வெளியாகும் பட்சத்தில், படம் மீண்டும் ஒருமுறை சமூக வலைதளங்களிலும், சினிமா உலகிலும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உதய்பூரில் ரகசிய திருமணமா? – ரஷ்மிகா & விஜய் தேவரகொண்டா குறித்து புதிய தகவல்

More in Cinema News

To Top