Connect with us

நானியின் சரிபோதா சனிவாரம் படத்தின் OTT அப்டேட் வெளியானது..!!

Cinema News

நானியின் சரிபோதா சனிவாரம் படத்தின் OTT அப்டேட் வெளியானது..!!

நானி மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்ட ‘சரிபோதா சனிவாரம்’ படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் Natural Star நானி அதேபோல் இந்த பக்கம் தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்ர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா.

இந்த இரு பெரும் நட்சத்திரங்களும் சேர்ந்து ஒரே படத்தில் இணைந்து அசுரதனமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள திரைப்படமே சரிபோதா சனிவாரம்.

ஆத்ரேயா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நானி – எஸ் ஜே சூர்யா ஆகியோருடன் சேர்ந்து பல பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பியது.

இந்நிலையில் இப்படம் எப்போது OTT தளத்தில் வெளியாகும் என அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது OTT ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 26ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top