Connect with us

டி20 உலகக்கோப்பைக்கு பயிற்சி.. முத்தரப்பு தொடரில் விளையாட இந்தியா வரும் நேபாள கிரிக்கெட் அணி

Nepal_Cricket_Team

Sports

டி20 உலகக்கோப்பைக்கு பயிற்சி.. முத்தரப்பு தொடரில் விளையாட இந்தியா வரும் நேபாள கிரிக்கெட் அணி

2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில் நேபாள கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து முத்தரப்பு தொடரில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய டி20 உலகக்கோப்பைகளைப் போல் அல்லாமல், 2024 தொடரில் அதிகபட்சமாக 20 அணிகள் பங்கேற்கின்றன. தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்றதன் மூலம், இந்த தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை நேபாள கிரிக்கெட் அணியும் பெற்றுள்ளது.

எனினும், சர்வதேச வீரர்களுக்கு எதிராக விளையாடிய அனுபவம் அதிகம் இல்லாத நேபாள அணி, உலகக்கோப்பை பயிற்சிக்காக மார்ச் இறுதியில் இந்தியா வருகிறது. இந்தியாவின் உள்ளூர் அணிகளான குஜராத் மற்றும் பரோடா ஆகிய அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாட உள்ளது.

லீக் சுற்றில் மூன்று அணிகளுடன் எதிரெதிர் அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் மோதவுள்ள நிலையில், லீக் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. அனைத்து போட்டிகளும் குஜராத்தின் வாபியில் உள்ள மைதானத்தில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நடைபெற உள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெற்றிநடை போடும் பெங்களூருக்கு அழுத்தம் கொடுக்குமா பஞ்சாப்..? - தரம்சாலாவில் இன்று பலப்பரீட்சை..!!

More in Sports

To Top