Connect with us

நயன்தாரா – விக்னேஷ் சிவன் விவாகரத்தா? பரவிய வதந்திக்கு பதிலடி!

Featured

நயன்தாரா – விக்னேஷ் சிவன் விவாகரத்தா? பரவிய வதந்திக்கு பதிலடி!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் பல ஆண்டுகளாக காதலில் இருந்த பிறகு, 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு, அவர்கள் வாடகைத் தாய் (சரோகசி) மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுக்கொண்டனர். இந்த விவகாரம் சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது தான், தங்களுக்கு முன்பே, ஆறாண்டுகளுக்கு முன்னரே பதிவு திருமணம் நடைபெற்றதாக அவர்கள் கூறினர்.

இதன் காரணமாக, அவர்கள் பிரம்மாண்டமாக நடத்திய திருமணம் என்பது வெறும் பெயரளவிலான திருமணம் தான் என சில விமர்சனங்களும் எழுந்தன. தற்போதைய நிலைப்படி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் இரு மகன்களுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார்கள். குடும்பத்துடன் இருக்கும் தங்கள் நிமிடங்களை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நயன்தாரா தனது கணவர் மீது அதிருப்தியில் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் போட்டதாகும், அதனாலேயே அவர்கள் விவாகரத்து பெற போகிறார்கள் என்றும் ஒரு செய்தி பரவியது. ஆனால், இந்த வதந்திகளுக்கு பதிலடி அளிக்கும் வகையில் நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். வதந்திகளுக்கு எதிராக அவர் வெளியிட்ட அந்த பதிவில், விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து இருக்கும் ஒரு அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “இதுவே எங்களது பதில்” எனும் வகையில், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  STR 49 வெற்றிமாறன்–சிம்பு புதிய படம்: டைட்டில் ரிவீல்!

More in Featured

To Top