Connect with us

ஜெயிலர் 2வில் ரஜினியுடன் நடிக்கும் பிரபல யூடியூப் ஸ்டார்.. அவர் யார் தெரியுமா?

Featured

ஜெயிலர் 2வில் ரஜினியுடன் நடிக்கும் பிரபல யூடியூப் ஸ்டார்.. அவர் யார் தெரியுமா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. இந்த திரைப்படம், 2023ஆம் ஆண்டு வெளிவந்து திரையரங்குகளில் மாபெரும் வெற்றிபெற்ற ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது. தமிழ் சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட் அளித்த அந்தப் படம், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார் மற்றும் சுராஜ் ஆகியோர் இணைந்து நடித்துவருகிறார்கள்.

மேலும், எஸ்.ஜே. சூர்யா மற்றும் தெலுங்கு நட்சத்திரம் நந்தமூரி பாலகிருஷ்ணா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், யூடியூப் வாயிலாக திரைப்பட விமர்சனங்களை வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கோடாங்கி, ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் தான் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், ரஜினிகாந்தை முதல் முறையாக சந்தித்த போது, ‘‘கோடாங்கி தானே நீங்க… எனக்கு நல்லா தெரியும்’’ என அவரே பாராட்டியதாகவும், அந்த சந்திப்பு தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சிறப்பான தருணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஜெயிலர் 2 திரைப்படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வ அப்டேட்களை எதிர்பார்த்துக்கொண்டு ரசிகர்கள் உற்சாகமாகக் காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top