Connect with us

நயன்தாரா ஆவணப்பட வழக்கில் நீதிபதியின் அதிரடி முடிவு!

Featured

நயன்தாரா ஆவணப்பட வழக்கில் நீதிபதியின் அதிரடி முடிவு!

நடிகை நயன்தாரா சமீபத்தில் தனுஷ் குறித்து வெளியிட்ட அறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது திருமண ஆவணப்படத்தில் “நானும் ரௌடி தான்” படத்தின் பாடல் வரிகள் மற்றும் காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டபோதும், தனுஷ் அதை மறுத்ததாக கூறினார்.

இந்த அறிக்கை வெளியானபோது, நயன்தாரா அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும், அந்தக் காட்சிகளைக் கடைசியில் தனது திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்தியிருந்தார். இதனால், தனுஷ் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னர் விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் பின்னர், ஜனவரி 22-ஆம் தேதி வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க முடிவு செய்தார். மேலும், எதிர்காலத்தில் கால அவகாசம் கேட்கக் கூடாது என்று நீதிபதி குறிப்பு விடுத்தார்.

இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் தொடர்ந்தும் தீர்வு காணப்படவுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top