Connect with us

நாகசைதன்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா!அடேங்கப்பா!

Cinema News

நாகசைதன்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா!அடேங்கப்பா!

நம்முடைய சினிமாவில் யார் திறமையாக இருந்தாலும் கொண்டாடுவது வழக்கம்..அதனால் தெலுங்கில் டாப் நடிகரான நாகார்ஜுனாவின் மகன் என்ற அடையாளத்தோடு தெலுங்கு சினிமாவில் 2009ம் ஆண்டு ஜோஷ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நாக சைத்தன்யா…அதன் மூலமே மக்களின் மனதில் பொய் நின்றார் என்றும் சொல்லலாம்…

அதன்பிறகு கௌதம் மேனன் ஹிட் படமான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஹீரோவான நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார், இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்…அப்போதிலிருந்தே இவர்களுக்கு லவ் ஆரம்பம் ஆகி ஓடியது…

பின் தொடர்ந்து மனம்,மஜிலி போன்ற படங்களில் சமந்தா-நாக சைத்தன்யா இணைந்து நடிக்க காதலும் வந்தது 2017ம் ஆண்டு திருமணமும் நடந்தது…மிகவும் பிரம்மாண்டமாக அவை நடந்து முடிந்தது,நன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்…அதுவே அனைவர்க்கும் ஷாக் தான்…பலரும் இன்றும் மீண்டும் சேர்ந்து விடுவர் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்…

அது ஒரு பக்கம் இருக்க இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகர்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் மகன் தான் நாக சைத்தன்யா….நாகர்ஜுனாவிற்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கின்றதாம்,அதனை போல அவரது மகன் நாக சைத்தன்யாவிற்கு ரூ.154 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது…விரைவில் அப்பா போல வருவார் என தெரிகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

More in Cinema News

To Top