Connect with us

“நடிகர் நாக சைதன்யாவின் ‘தூதா’ Web Series Trailer வெளியாகி Viral!”

Cinema News

“நடிகர் நாக சைதன்யாவின் ‘தூதா’ Web Series Trailer வெளியாகி Viral!”

தேசிய விருதைப் பெற்ற இயக்குநர் விக்ரம் குமார் கடைசியாக நாக சைதன்யாவை வைத்து ‘தேங்க் யூ’ படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதால் பாக்ஸ் ஆஃபீஸில் சோபிக்கவில்லை.

இந்நிலையில், விக்ரம் குமார் அடுத்ததாக ‘தூதா’ என்ற தெலுங்கு வெப் சீரிஸை இயக்கியுள்ளார். நாக சைதன்யா, ப்ரியா பவானி சங்கர், பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூப்பர் நேச்சூரல் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் தொடரை நார்த்ஸ்டார் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

பத்திரிகையாளரான நாக சைதன்யா தன்னைச் சுற்றி நடக்கும் மர்மமான நிகழ்வுகள் மற்றும் கொடூர மரணங்களை எப்படி கண்டறிகிறார் என்பது இந்தத் தொடரின் ஒன்லைன். இந்தத் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து தற்போது இந்த வெப் சீரிஸ்ன் ட்ரைலர் வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும், இத்தொடரை தெலுங்கு, தமிழ், கன்னடம் மலையாளம் மற்றும் இந்தியில் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வாடிவாசலில் சூர்யாவுக்கு வில்லனாகும் இயக்குநர் அமீர் - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்..!!

More in Cinema News

To Top