Connect with us

“மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தின் Title இதுவா? வில்லனாகும் இந்த பிரபலமா?!”

Cinema News

“மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தின் Title இதுவா? வில்லனாகும் இந்த பிரபலமா?!”

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை கலைபுலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் பூஜையுடன் தொடங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் ஒரு விறுவிறுப்பாக கதை அம்சம் கொண்டது என்றும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரயிலில் படமாக்கப்பட உள்ளதால் இந்த படத்திற்கு ’Train’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு த்ரில் சம்பவம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு பூஜை தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இணைந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top