Connect with us

சித்தா படத்தின் OTT ரிலீஸ் அப்டேட்!இந்த வருடத்தின் ஸ்பெஷல் திரைப்படங்களில் ஒன்று!

Cinema News

சித்தா படத்தின் OTT ரிலீஸ் அப்டேட்!இந்த வருடத்தின் ஸ்பெஷல் திரைப்படங்களில் ஒன்று!

சித்தார்த் மற்றும் நிமிஷா சஹஸ்ரா ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட ‘சித்தா’ திரையரங்கில் நல்ல ஓட்டம் ஓடியது அதனை தொடர்ந்து இப்போது OTTயில் வர இருக்கின்றது…இப்படம் இம்மாதம் 28 வர இருக்கின்றது..

திரை விமர்சகர்களால் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என்று பாராட்டப்பட்ட சித்தா படம் குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை அடித்து சொல்லும் ஒரு முக்கிய படமாக திகழ்கிறது..

தமிழ் திரையுலகில் இதுவரை திரையில் பேசப்படாத சில முக்கியமான விஷயங்களை கொடுக்கும் விதத்தில் இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது…ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது…இந்த கதை மக்களால் இன்றும் பேசப்பட்டு வருகின்றது…

தமிழ்நாட்டின் பழனி நகரத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ள இந்த கதை பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுமி கடத்தப்படுவதைச் சுற்றிச் சுழல்கிறது அந்தக் கடத்தலால் அந்த சிறுமியின் குடும்பமும் அக்குழந்தையும் படும் துயரத்தையும் அந்தக் குழந்தையை மீட்க குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளையும் இக்கதை வலியுடனும் உண்மையுடனும் சொல்கிறது…இது மிகவும் சமூகத்திற்கு தேவையான ஒரு படமாக இருக்கின்றது..அதனால் நிச்சயம் OTTஇழு நன்கு பேசப்படும் என தெரிகின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top