Connect with us

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி கேள்விக்குறி – திருமாவளவன்

Featured

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி கேள்விக்குறி – திருமாவளவன்

மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் . திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது :

நாட்டின் அரசியலமைப்பைக் காக்க வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றியுள்ளனர். தனிப்பெரும்பான்மை பெற முடியாத பின்னடைவு பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது.

நரேந்திர மோடி தலைமையில் அமையவுள்ள அரசு அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்நேரத்திலும் கருத்து வேறுபாடு எழ வாய்ப்பு உள்ளது .

நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு மற்றும் ஏக்நாத் ஷிண்டே தங்களுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நவம்பர் 6-ல் தேர்தல் சின்னம் கேட்டு டெல்லி செல்கிறார் விஜய்! எந்த சின்னத்தில் களம்?

More in Featured

To Top