Connect with us

இந்திய அணி அசத்தல் பந்துவீச்சு – 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அயர்லாந்து அணி..!!

Featured

இந்திய அணி அசத்தல் பந்துவீச்சு – 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அயர்லாந்து அணி..!!

ரசிகர்களின் ஆரவாரத்துடன் இனிதே தொடங்கியுள்ள டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி இந்திய அணிக்கு 97 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகிறது.

நியூயார்க் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார் . இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அயர்லாந்து அணி பேட்டிங் செய்தது.

ஆறாம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அயர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர் .

இறுதி கட்டத்தில் டெலானி அதிரடியாக விளையாடி அயர்லாந்து கவுரமான நிலையை எட்ட உதவினார். 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அயர்லாந்து 96 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய தற்போது விளையாடி வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்கபோகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூறைக் காற்றுடன் கரையைக் கடக்க தொடங்கியது ஃபெஞ்சல் புயல்..!!

More in Featured

To Top