Connect with us

புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரை அமைச்சர்கள் நாங்கள் களத்தில் உள்ளோம் – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

Featured

புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரை அமைச்சர்கள் நாங்கள் களத்தில் உள்ளோம் – அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்

புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரைக்கும் அமைச்சர்கள் நாங்கள் களத்தில் உள்ளோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறிருப்பதாவது :

  • சென்னையில் ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் புயல் நிவாரண நிதியாக 6000 வழங்கப்படும்.

  • கடந்த அதிமுக ஆட்சியைப் போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் நடக்கும் இந்த ஆட்சியில் நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை.

  • டெல்லியில் உள்ள தலைவர்களை போல் மணி அடியுங்கள், தட்டை தட்டுங்கள் என்று நாங்கள் கூறவில்லை. இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக கொரோனா காலத்தில் திமுக அரசு செயல்பட்டது.

  • 2011 டிசம்பரில் ‘தானே’ புயல் கடலூரை சூறையாடிய போது அதிமுகவினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.

  • 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து சென்னையை மூழ்கடித்தார்கள்.

  • 2017ல் கன்னியாகுமரியை நிலைகுலைய வைத்த ‘ஒக்கி’ புயலின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரப்புரையில் அமைச்சர்கள் இருந்தனர்.

  • 2018ல் ‘கஜா’ புயல் டெல்டா பகுதியை தாக்கிய போது, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தார் ஆனால், இப்போது புயல் வீசியதில் இருந்து இந்த நொடி வரைக்கும் அமைச்சர்கள் நாங்கள் களத்தில் உள்ளோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கரூர் மரணங்கள்: "நாங்களும் ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம்" – எஸ்.ஏ. சந்திரசேகர்

More in Featured

To Top