Connect with us

“மனதை புண்படுத்திவிட்டேன்…வருந்துகிறேன்…” – வைரலாகும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ட்விட்டர் பதிவு..

Featured

“மனதை புண்படுத்திவிட்டேன்…வருந்துகிறேன்…” – வைரலாகும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் ட்விட்டர் பதிவு..

பொது இடத்தில் நான் பேசியது மாற்றுத்திறனாளி நண்பர்களை காயப்படுத்தி உள்ளதாக அறிந்தேன் அவர்களின் மனதை புண்படுத்தியதற்காக வருந்துகிறேன் என தமிழ்நாடு நித்தியமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது :

“கடந்த நவ. 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எனது பேச்சின் ஊடே நான் பயன்படுத்திய வார்த்தை மாற்றுத்திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

மாற்றுத்திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன் என்ற வகையில், எவ்வித உள்நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன் எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது ட்விட்டர் பதிவில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலக்சன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

More in Featured

To Top