Connect with us

“கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்” – எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

Featured

“கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்” – எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் டிச.3ல் உருவாகும் புயல் டிச.4 ல் வட தமிழகம் – ஆந்திரா இடையே நிலவும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது :

வங்கக்கடலில் டிச.3ல் உருவாகும் புயல் டிச.4 ல் வட தமிழகம் – ஆந்திரா இடையே நிலவும் என்றும் 43 கி.மீ. தூரத்திற்கு காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் டிச.3,4ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் டிச.2,3,4ஆம் தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய மண்டல தலைவர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் மூலம் அடுத்த 1 வாரத்திற்கு தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்க போகிறது என தெள்ளத்தெளிவாக தெரிந்துள்ளதால் கனமழை குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ் D55 திரைப்படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்

More in Featured

To Top