Connect with us

Marvel படங்களில் இருந்து நடிகர் ஜோனதன் மேஜர்ஸை நீக்கிய Marvel Studios!

Cinema News

Marvel படங்களில் இருந்து நடிகர் ஜோனதன் மேஜர்ஸை நீக்கிய Marvel Studios!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோனதன் மேஜர்ஸ். இவர், ‘த ஹார்டர் தே ஃபால்’, ‘டிவோஷன்’, மார்வெல் படமான ‘ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவான்டுமேனியா’, ‘கிரீட் 3’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிரிட்டிஷ் நடன இயக்குநர் கிரேஸ் ஜப்பாரியைக் காதலித்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஜோனதன், அவரை கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். இதில், அவர் கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கழுத்து, காது பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் கிரேஸ் போலீஸில் புகார் அளித்தார்.

போலீஸார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஜோனதனுக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, மார்வெல் நிறுவனத்தின் அடுத்த படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். மார்வெல் படங்களின் காங் தி கான்கரர் என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் இவர் நடித்துவந்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top