Connect with us

‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு! புதிய ரிலீஸ் தேதி இதுதானா?!

Cinema News

‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு! புதிய ரிலீஸ் தேதி இதுதானா?!

விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் ஜனவரி இறுதியில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் செய்து தள்ளிப் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 26 குடியரசு தின விடுமுறையின் போது இந்த படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர்.

ஆனால் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிய காலதாமதம் ஆகும் என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்றும் கூறப்பட்டது. அது மட்டுமின்றி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கலந்து கொள்ள உள்ளது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ’தங்கலான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 29 என்று கூறப்படுகிறது. மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் அன்றைய தினம் விடுமுறை என்பதும் தொடர்ச்சியாக மூன்று நாள் விடுமுறை என்பதால் இந்த படத்தின் ஆரம்பகட்ட வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் வசூலிலும் சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது. விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உட்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top