Connect with us

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ திரைப்படம் முதல் 3 நாட்களில் வசூலில் வெற்றி – முழு விவரம் இதோ!

Featured

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ திரைப்படம் முதல் 3 நாட்களில் வசூலில் வெற்றி – முழு விவரம் இதோ!

க்ரைம் திரில்லர் வகை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு தனித்துவமான எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருந்து வருகிறது. ராட்சசன், யுத்தம் செய்தி, துருவங்கள் பதினாறு, டைரி, போர் தொழில், லெவன் ஆகிய திரைப்படங்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாக கூறலாம்.

இந்த வரிசையில், கடந்த வாரம் திரைக்கு வந்த புதிய திரைப்படம் தான் “மார்கன்”. அறிமுக இயக்குநராக லியோ ஜான் பால் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில், அவருடன் அஜய், சமுத்திரக்கனி, ப்ரகிடா மற்றும் தீப்ஷிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் இப்படத்திற்கு ஓரளவான நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த திரைப்படம் திரையரங்குகளில் மூன்று நாட்களை கடந்துள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்களில் உலகளவில் விஜய் ஆண்டனியின் “மார்கன்” திரைப்படம் ரூ. 4.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top