Connect with us

COPYRIGHT சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – தனுஷ் 20 கோடி கேட்டாரா? வெற்றிமாறன் விளக்கம்!

Featured

COPYRIGHT சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி – தனுஷ் 20 கோடி கேட்டாரா? வெற்றிமாறன் விளக்கம்!

விடுதலை 2 படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் படம் வாடிவாசல் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல காரணங்களால் வாடிவாசல் படத்தின் வேலைகள் தள்ளிப்போனது. இதையடுத்து, கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் ‘எஸ்டிஆர் 49’ திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க ஒப்புக்கொண்டார். சமீபத்தில், இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த வீடியோ விரைவில் வெளியாவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம், ‘வடசென்னை 2’ என இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து, வடசென்னை பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தனுஷ், இப்படத்தின் காப்புரிமைக்காக ரூ. 20 கோடி கேட்டதாக சில தகவல்கள் வெளியானது. இது சமூக ஊடகங்களில் பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

“எஸ்டிஆர் 49 திரைப்படம், வடசென்னை 2 ஆகும் என சிலர் பேசுகிறார்கள். அதை நான் கவனித்தேன். ஆனால், அது வடசென்னை 2 கிடையாது. தனுஷ் நடிப்பதுதான் வடசென்னை 2 ஆகும். அது ‘அன்புவின் எழுச்சி’யை மையமாகக் கொண்டு இருக்கும். எஸ்டிஆர் 49 படம் வடசென்னை உலகத்தில் நடைபெறும் ஒரு கதைதான். அதாவது, அதில் சில கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் வடசென்னை படத்துடன் தொடர்புடையவையாக இருக்கலாம்.

வடசென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால், இப்படம் சம்பந்தமாக அவரிடம் உரிமை கேட்க வேண்டியது இயல்பு. காப்புரிமை (Copyright) தொடர்பாக தனுஷிடம் பேசும் போது, அவர், ‘சார், உங்களுக்கு என்ன சரியாக இருக்குமோ அதை செய்யுங்கள். நாங்க எங்க சைடுல இருந்து NOC கொடுத்துரோம். பணம் எல்லாம் வேண்டாம்’ என்று கூறினார்.

ஆனால், அவருக்கு ரூ. 20 கோடி கேட்டதாக பரவும் வதந்திகளைப் பார்த்தபோது, ரொம்ப மனவேதனை ஏற்படுகிறது,” என வெற்றிமாறன் கூறியுள்ளார். இதன்மூலம், தனுஷ் ரூ. 20 கோடி கேட்டதாக வெளியான வதந்திக்கு இயக்குநர் வெற்றிமாறன் தெளிவான மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்த ஜோடி சூப்பர் கூட்டணி! கவின், பிரியங்கா மோகன் புதிய படத்தில் இணைகிறார்கள்..

More in Featured

To Top