Connect with us

“மன்மோகன் சிங் எப்போதும் நினைவுகூரப்படுவார்” – பிரதமர் மோடி புகழாரம்

Featured

“மன்மோகன் சிங் எப்போதும் நினைவுகூரப்படுவார்” – பிரதமர் மோடி புகழாரம்

நாடாளுமன்ற கட்டடத்தையும், நாட்டையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வழிநடத்திய விதம் மூலம் அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மாநிலங்களவையில் இன்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது :

மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்கள், இந்த நாட்டின் மிகப்பெரிய சொத்து இந்த தருணத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நினைவு கூற விரும்புகிறேன்.

6 முறை இந்த அவையை அவர் அலங்கரித்துள்ளார் அவரது பங்களிப்பு மகத்தானது. இவ்வளவு காலமாக, இந்த நாடாளுமன்ற கட்டடத்தையும், நாட்டையும் மன்மோகன் சிங் வழிநடத்திய விதம் மூலம் அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்

அனைத்து எம்.பி.க்களுக்கும் முன்னுதாரணமாக திகழும் மன்மோகன் சிங் முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்புகளின் போது, உடல்நலம் குன்றியிருந்தும் கூட தனது சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தது எனக்கு நினைவிருக்கிறது

ஒரு உறுப்பினர் தனது கடமைகளில் விழிப்புடன் இருப்பதற்கான எடுத்துக்காட்டு இது. ஓய்வு பெற இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன் என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Rowdy Janardhan Buzz 🚀 Vijay Deverakondaக்கு எதிரி Vijay Sethupathi!

More in Featured

To Top