Connect with us

“மீண்டும் திரையரங்குகளை கலக்கும் ‘மங்காத்தா’ – தல ரசிகர்கள் உற்சாகம்”

Cinema News

“மீண்டும் திரையரங்குகளை கலக்கும் ‘மங்காத்தா’ – தல ரசிகர்கள் உற்சாகம்”

தல அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாக வருகிறது. வருகிற 23ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான புதிய டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பழைய நினைவுகளை மீண்டும் திரையில் காண தல ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.

2011ஆம் ஆண்டு வெளியான போது இந்த படம், அஜித்தின் நெகட்டிவ் ஷேட்ஸுடன் கூடிய கதாபாத்திரம், ஸ்டைலிஷ் நடிப்பு மற்றும் திருப்புமுனைகள் நிறைந்த கதைக்களம் காரணமாக ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இன்றும் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளன.
தற்போதைய ரீ-ரிலீஸால் பழைய ரசிகர்கள் மீண்டும் அந்த காலத்துக்கு திரும்பும் அனுபவம் பெறுகின்றனர்; அதே நேரத்தில் புதிய தலைமுறை ரசிகர்கள் இந்த மெகா ஹிட்டை பெரிய திரையில் முதன்முறையாக காணும் வாய்ப்பையும் பெறுகின்றனர். இதனால் மங்காத்தா திரையரங்குகளில் மீண்டும் ஒரு திருவிழா சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top