Connect with us

தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் மஞ்சும்மல் பாய்ஸ், ப்ரேமலு – வெளியான லேட்டஸ்ட் தகவல்

Cinema News

தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் மஞ்சும்மல் பாய்ஸ், ப்ரேமலு – வெளியான லேட்டஸ்ட் தகவல்

தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியான இரு மலையாள படங்கள் தற்போது தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது .

மிகவும் குறைவான பட்ஜெட்டில் மலையாளத்தில் வெளிவந்து திரைப்படங்கள் தான் மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் ப்ரேமலு . வெளியான நாள் முதல் ரசிகர்களின் அமோக ஆதரவு பெற்று தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியியாகவும் மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ளது.

இந்த இரண்டு திரைப்படங்களும் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் கடந்த சில நாட்களுக்கும் முன் தமிழில் வெளியானது .பொதுவாக எந்த மொழி படமாக இருந்தாலும் படம் நன்றாக இருந்தால் நல்ல வரவேற்பை கொடுக்கும் நம்ப தமிழ் ரசிகர்கள் இந்த படங்களுக்கும் அமோக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

இந்த இரண்டு படங்களும் உலகளவில் 100 கோடி வசூலை கடந்த நிலையில் தற்போது தமிழக இப்படம் செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி மஞ்சும்மல் பாய்ஸ் தமிழகத்தில் சுமார் தமிழகத்தில் ரூ. 52 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இதேபோல் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் வெளியான ப்ரேமலு திரைப்படமே சுமார் 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொண்டாட தயாரா : தலையின் பிறந்தநாளன்று ரீ-ரிலீஸ் ஆகிறது 'மங்காத்தா' திரைப்படம்..!!!

More in Cinema News

To Top