Connect with us

தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ – இதுவரை எவ்ளோ கலெக்சன் தெரியுமா..?

Cinema News

தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ – இதுவரை எவ்ளோ கலெக்சன் தெரியுமா..?

நண்பர்கள் கொண்டாடும் வெற்றிப்படமாக உருமாறி வரும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் நல்ல வசூலை ஈட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள மலையாளப் படமே ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

கேரளா மாநிலத்தில் மஞ்சும்மல் என்ற பகுதியிலிருந்து கொடைக்கானலுக்குச் சுற்றுலா வந்த நண்பர்களில் ஒருவர், குணா குகையில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்கிறார். அவரை அவரது நண்பர்கள் எப்படி மீட்டார்கள் என்பதே இப்படத்தின் கதை.

சிதம்பரம் இயக்கியுள்ள இப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் இந்தியா முக்குவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

ரசிகர்கள் மட்டுமின்றி இப்படத்தை திரை நட்சத்திரங்களும் கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் பத்கலவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் படம் தமிழகத்துள் செய்துள்ள வசூல் குறித்த லேட்டஸ்ட் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுமட்டுமின்றி இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக கேரள சினிமவில் மினிமம் பட்ஜெட் படங்களே அதிகம் வெற்றி பெற்று வரும் நிலையில் தற்போது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் அதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

More in Cinema News

To Top