Connect with us

‘அனிமல்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா கிடையாதா..?

Cinema News

‘அனிமல்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா கிடையாதா..?

விரைவில் உருவாக இருக்கும் ‘அனிமல்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகாவுக்கு பதிலாக வேற ஒரு பிரபல நடிகையிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரன்பிர் கபூரின் நடிப்பில் கடந்த 2023 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் அனிமல்.

உலகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

என்னதான் அவர்கள் ஊரில் இப்படம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் படத்தில் அதிக அளவில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படம் அந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் ’அனிமல்’ படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகை ராஷ்மிகாவுக்கு பதிலாக வேற ஒரு பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கிட்டத்தட்ட அவர் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கொண்டாட தயாரா : தலையின் பிறந்தநாளன்று ரீ-ரிலீஸ் ஆகிறது 'மங்காத்தா' திரைப்படம்..!!!

More in Cinema News

To Top