Connect with us

மணிகண்டன் நடிக்கும் ‘லவ்வர்’ படத்தில் இருந்து வெளியான தாறுமாறு தகவல்..!!

Cinema News

மணிகண்டன் நடிக்கும் ‘லவ்வர்’ படத்தில் இருந்து வெளியான தாறுமாறு தகவல்..!!

மணிகண்டனின் புதுமையான நடிப்பில் உருவாகி உள்ள ‘LOVER’ திரைப்படத்தின் 1st சிங்கிள் பாடல் குறித்த சிறப்பான தரமான அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் மனதில் குடிபுகுந்தவர் நடிகர் மணிகண்டன் . இதையடுத்து குட் நைட் என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய மணிகண்டன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருகிறார் .

இந்நிலையில் இவரது நடிப்பில் பிரபு ராம் இயக்கத்தில் வேற லெவலில் உருவாகி உள்ள திரைப்படம் ‘LOVER’ இப்படத்தில் மணிகண்டனுடன் சேர்ந்து கௌரி ப்ரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் 1st சிங்கிள் பாடல் குறித்த சிறப்பான தரமான அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

அதன்படி,இப்படத்தின் ‘விலகாத’ என்ற 1st சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அழகிய போஸ்டர் மற்றும் வீடியோவை மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top