Connect with us

ஜாலியான College Boy ரோலுக்கு வந்த மணிகண்டன்…வைரலாகும் புகைப்படங்கள்!

Cinema News

ஜாலியான College Boy ரோலுக்கு வந்த மணிகண்டன்…வைரலாகும் புகைப்படங்கள்!

சினிமாவின் மீது கொண்ட அதீத காதலின் காரணமாக சின்னத்திரையில் பல கிடைக்கும் வாய்ப்புகளை வைத்து ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று தனது கலைப்பயணத்தை தொடங்கிய நடிகர் தான் மணிகண்டன்…இவரின் திறமையை கண்டு அனைவருமே வியப்பது உண்மையாகும்..

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பீட்சா 2 திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்…அதன் பிறகு தொடர்ச்சியாக ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.நிறைய படங்களில் இவர் நடித்து இவரின் ரோல் பேசவும் பட்டிருந்தது…

அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கி வெளியிட்ட விக்ரம் வேதா திரைப்படத்தில் சந்தானம் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த படத்திற்கு வசனமும் எழுதி இருந்தார் மணிகண்டன்.

இதற்காக அவருக்கு சிறந்த வசனகர்த்தா விருது கிடைத்ததும் அனைவரும் அறிந்ததாகும்….அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவர் நடித்த காலா அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஞானவேல் இயக்கத்தில் வெளியான சூர்யாவின் ஜெய் பீம் என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்த ராஜாக்கண்ணு என்கின்ற கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது…அவருக்கு மிகப்பெரிய பெயரை தந்ததுடன் உலக அளவில் அவர் நடிப்பை பாராட்டி இருந்தனர்…

அதைத் தொடர்ந்து தற்பொழுது பல திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார்…இறுதியாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்…அந்த படம் குடும்பம் என அனைவராலும் கொண்டாட பட்டு மக்களிடம் நன்கு பேசப்பட்டு இருந்தது….

இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் வியாஸ் என்பவர் இயக்கும் ஒரு திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார்….அதில் அவர் அப்படியே மாறியுள்ளது போல இருக்கின்றது,தற்பொழுது இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றும் வருகின்றது…அதிலிருந்து வந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மெட்ரோ ரயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்தினால் அதிக கட்டணம் வசூலிக்கப்படும்..!!

More in Cinema News

To Top