Connect with us

கமலைத் தொடர்ந்து ரஜினியுடன் இணைகிறாரா மணி ரத்னம்? அவரே சொன்ன பதில்!

Featured

கமலைத் தொடர்ந்து ரஜினியுடன் இணைகிறாரா மணி ரத்னம்? அவரே சொன்ன பதில்!

இந்திய சினிமாவின் பிரபல இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம், ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, நாசர், அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியாகியுள்ள டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தக் லைஃப் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இயக்குநர் மணி ரத்னம், கமல் ஹாசன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் ப்ரோமோஷனில் முழு தீவிரத்துடன் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஒரு பேட்டியில் மணிரத்னத்திடம், “கமலுடன் இணைந்ததுக்கு பிறகு, ரஜினியுடனும் படம் பண்ணப்போறீர்களா?” என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “ரஜினி சாரை தான் கேட்கணும். அவருக்கு ஏற்ற மாதிரி கதை இருந்தால், அவரிடம் நேரம் இருந்தால், நிச்சயம் அவரை கேட்பேன்” என்றார். மேலும், “ஒரு பெரிய ஸ்டாருடன் படம் பண்ணணும்னா, அதற்கு ஏற்ற தீனி இருக்கணும். சாதாரண கதையை வைத்து, ரஜினி சார் மாதிரி பெரிய ஸ்டாரை அணுக முடியாது. அவருடைய மார்க்கெட்டை நினைவு வைத்துக்கொண்டு, வித்தியாசமான கதையோட தான் போகணும்” என்றார் இயக்குநர் மணி ரத்னம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேரளாவில் முதல்முறையாக வரலாற்றில் பெயர் பதித்த லோகா!

More in Featured

To Top