Connect with us

கமலைத் தொடர்ந்து ஜாக்கி சானுடன் இணையும் சிம்பு – விரைவில் அதிரடி அறிவிப்பு!

Featured

கமலைத் தொடர்ந்து ஜாக்கி சானுடன் இணையும் சிம்பு – விரைவில் அதிரடி அறிவிப்பு!

சிம்பு தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், தனது 49வது படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அடுத்ததாக, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் STR 50 உருவாகிறது. மேலும், டிராகன் பட இயக்குநருடன் STR 51-இலும் கமிட் செய்துள்ளார். இந்நிலையில், சிம்புவின் இன்னொரு புதிய படத்தின் அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது.

மலையாளத்தில் 2018 எனும் மாபெரும் ஹிட் படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி, சிம்புவை வைத்து படம் இயக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வந்திருந்தது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. இப்போது அந்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் முக்கியமாக, இந்த படத்தில் உலக புகழ்பெற்ற நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேறு யாரும் இல்லை. நடிகர் ஜாக்கி சான் தான். ஆம், ஆக்ஷன் ஜாம்பவான் ஜாக்கி சானுடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலாக, மணி ரத்னம் இயக்கத்தில், கமலுடன் சிம்பு நடித்திருக்கும் “தக் லைஃப்” திரைப்படம், வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டூரிஸ்ட் பேமிலி படத்தில் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டது மம்பட்டியான் பாடல் – என கூறும் தியாகராஜன்..

More in Featured

To Top