Connect with us

தரமான காம்போ : மம்மூட்டி நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது..!!

Cinema News

தரமான காம்போ : மம்மூட்டி நடிப்பில் கௌதம் மேனன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது..!!

மம்மூட்டி நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ள நிலையில் அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்மூட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் தற்போது உருவாக உள்ள திரைபடம் குறித்த முக்கிய அறிவிப்பு தான் தற்போது வெளியாகி உள்ளது.

கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை வைத்து பிரபல இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் படம் இயக்கப்போவதாக திரை வட்டாரங்களில் கிசுகிசுக்க பட்ட நிலையில் கொச்சியில் இன்று அப்படத்தின் பூஜை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது .

கௌதம் மேனன் இயக்கும் முதல் மலையாளப் படமான இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்மூட்டியே தயாரிக்க உள்ளாராம்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடந்துமுடிந்துள்ள இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  எங்கள் Emergency படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது - உருக்கமான அறிவிப்பை வெளியிட்ட கங்கனா..!!

More in Cinema News

To Top