Connect with us

புதிய தமிழ் படத்தில் கமிட்டான ‘பிரேமலு’ நாயகி – ஹீரோ யார் தெரியுமா..?

Cinema News

புதிய தமிழ் படத்தில் கமிட்டான ‘பிரேமலு’ நாயகி – ஹீரோ யார் தெரியுமா..?

பிரேமலு படத்தின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நடிகை மமிதா புதிய தமிழ் படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதாக டக்கர் தகவல் வெளியாகி உள்ளது.

நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்பட பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள திரைப்படமே ‘பிரேமலு’. மலையாளம் மட்டுமின்றி தமிழுலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்த படம் ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை மமிதாவுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இதையடுத்து நடிகை மமிதா ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவான ரபேல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார்.

தமிழ் ரசிகர்களின் மனதில் மெல்ல மெல்ல இடம் பிடித்து வரும் மமிதா தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை மமிதா பைஜூ ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top