Connect with us

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

Cinema News

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மாஸ் ஹீரோககிளில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. வில்லன் ஹீரோ என பல அவதாரங்களை எடுக்கும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி ஹிந்தி , மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் அவரது 50வது படமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘மகாராஜா’

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அப்டேட் ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதோ அந்த ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top