Connect with us

களத்தில் மிரட்டப்போவது யார்..? பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

Featured

களத்தில் மிரட்டப்போவது யார்..? பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் லக்னோவில் உள்ள பிரபல கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் போடப்பட்ட டாசில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

நடப்பு தொடரில் பஞ்சாப் அணி எதிர்கொண்ட இரண்டு போட்டியில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் பெற்றுள்ளது.

அப்படியே இந்த பக்கம் பார்த்தால் நடப்பு தொடரில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்ட லக்னோ அணி எதிர்பாராத தோல்வியை பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி இரண்டாவது தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top