Connect with us

IPL 2024 : பேட்டிங்கில் மிரட்டிய டி காக், பூரன் – பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் இலக்கு..!!!

Featured

IPL 2024 : பேட்டிங்கில் மிரட்டிய டி காக், பூரன் – பெங்களூரு அணிக்கு 182 ரன்கள் இலக்கு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி பெங்களூர் அணிக்கு 182 ரன்களை இலக்காக நிணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் பெங்களூரு – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் – கே.எல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஆரமபம் முதல் அதிரடியாக விளையாடிய டி காக் எதிரணியின் பந்துகளை பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார்.

மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 20 ரன்களில் கேட்ச் மூலம் தனது விக்கெட்டை இழந்தார் அவரைத் தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 6 ரன்களில் வந்த வழியில் அப்படியே திரும்பி சென்றார் .

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டிகாக் 56 பந்துகளில் 81 ரன்கள் குவித்து 17வது ஓவரில் வெளியேற்றினார்.

பின்னர் கடைசி கட்டத்தில் சீறிய நிக்கோலஸ் பூரன் 18ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சரை விளாசி மிரட்டினார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 181 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பெங்களூரு அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பந்துவீச்சில் மிரட்டிவிட்ட கொல்கத்தா - டெல்லி அணி 153 ரன்கள் குவிப்பு..!!

More in Featured

To Top