Connect with us

தலைவரின் படத்துக்காக உழைக்கப்போகிறேன் “GOOD BYEE” – வைரல் ஆகும் லோகேஷ் கனகராஜின் லேட்டஸ்ட் போஸ்ட்..!!

Cinema News

தலைவரின் படத்துக்காக உழைக்கப்போகிறேன் “GOOD BYEE” – வைரல் ஆகும் லோகேஷ் கனகராஜின் லேட்டஸ்ட் போஸ்ட்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 171வது படத்திற்காக முழு கவனத்துடன் உழைக்க போவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சுட சுட போட்டுள்ள பதிவு தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் தொடங்கி லியோ வரை 5 சிறப்பான தரமான ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்துள்ள இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்து ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டாரின் 171வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இவர்களின் கூட்டணி சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத் தொல்லை கொடுத்து வந்த நிலையில் தற்போது சிறப்பான தரமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ் கூறியதாவது:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 171வது திரைப்படத்தை இயக்குவதற்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளேன் , தலைவரின் படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்த உள்ளதால் அனைத்து சமூக வலைதள பக்கத்திலிருந்தும் சிறிது காலம் ஓய்வு பெற இருக்கிறேன்.

எனது தயாரிப்பு ( G Squad ) நிறுவனத்தின் முதல் படமாக, விஜய் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘Fight Club’ படத்திற்கு ரசிகர்கள் நீங்கள் கொடுக்கும் வரவேற்பிற்காக மிக்க நன்றியை தெரிவிக்க கடைமைபட்டுள்ளேன் என தனது பதிவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  IPL 2024 : திலக் வர்மா , வதேரா சரவெடி ஆட்டம் - ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top