Connect with us

“Lioness படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் AR ரஹ்மானின் மகள் கதிஜா ரகுமான்!”

Cinema News

“Lioness படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் AR ரஹ்மானின் மகள் கதிஜா ரகுமான்!”

இசைப்புயல் AR ரஹ்மான் மகள் கதிஜா ரஹ்மான, பிரிட்டீஷ்-இந்தியா திரைப்படமான லையனெஸ் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதுபற்றி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை என்எஃப்டிசி என்று அழைக்கப்படும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் மற்றும் யுகேவை சேர்ந்த தி பிரிட்டீஷ் பிலிம் இன்ஸ்டிடியூட் இணைந்து உருவாக்கிறது. படத்தை கஜ்ரி பாப்பர் எழுதி, இயக்குகிறார். கடந்த 2020இல் ஃபரிஷ்டன் என்ற சிங்கிள் பாடல் மூலம் இசையுலகில் அறிமுகமானார் கதிஜா. இந்த பாடலுக்கு AR ரஹ்மான் இசையமைத்திருப்பார்.

இதைத்தொடர்ந்து லையனஸ் படம் மூலம் சர்வதேச அளவில் முதல் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார் கதிஜா. இதுகுறித்து அவர் கூறியதாவது, “லையனஸ் படத்தில் அறிமுகமாவதில் த்ரில்லாகவும், பெருமையாகவும் உள்ளது. படத்தின் கதையை கேட்டதில் இருந்தே மிகவும் ஆழமாக அதில் இணைந்துள்ளேன். இந்த கதைக்கு இசை மூலம் உயிர் கொடுக்க முயற்சிப்பேன். இளவரசி சோபியாவின் நீண்ட கால போராட்டம், அவருக்கு கிடைக்க தாமதமான அங்கீகாரத்தை பெறுவதை உறுதி செய்வதே எங்களது விருப்பம்” என்றார்.

இந்த படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள். கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. லையனஸ் கதை ஒரு நாற்றாண்டு வித்தியாசத்தில் வாழ்ந்த இரு பெண்களை பற்றிய கதையாக அமைந்துள்ளது. இதில் முதல் கதையானது மஹாராஜா ரஞ்சித் சிங் பேத்தி மற்றும் விக்டோரியா மகாராணியின் மகள் சோபியா துலீப் சிங் என்ற இளவரசியை நகருகிறது.

இந்த கதாபாத்திரத்தில் பிரட்டீஷ் நடிகை பைஜ் சந்து நடிக்கிறார். இரண்டாவது கதை கற்பனை கதாபாத்திரமான சிம்ரன்ஜித் கெளர் என்ற பெண்ணை பற்றியதாக உள்ளது. இதில் 1990களில் செளத்ஹால் பகுதியில் வாழும் பெண்ணாக அதீதி ராவ் நடிக்கிறார். ஏஆர் ரஹ்மான் வீட்டிலிருந்து அவரது சகோதரி ஏஆர் ரஹைனாவை தொடர்ந்து, தற்போது அவரது மகள் கதிஜாவும் இசைமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'வேட்டையன்' படத்தில் தனது பகுதியை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!

More in Cinema News

To Top