Connect with us

கரையானால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சோகம், ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!

Featured

கரையானால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த சோகம், ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்!

சமூக வலைதளங்கள் நல்லதும் கெட்டதும் கலந்தவையாக தான் இருக்கின்றன. ஆனால் சில நேரங்களில், அவை மக்களுக்கு மிகுந்த உதவியாகவும் இருக்கின்றன. சிவகங்கை மாவட்டம் சுக்கனாம்பட்டியைச் சேர்ந்த முத்துக்கருப்பி என்ற பெண், கூலி வேலை செய்து வரும் ஒருவர். தனது கணவருடன் இணைந்து வேலை செய்து, சிறுசிறு தொகையாக பணம் சேமித்து வந்துள்ளார்.

அந்த சேமிப்பு, தனது மகள்களின் காது குத்துக்காக. ஒரு லட்சம் ரூபாய் வரை சேமிக்கப்பட்ட அந்த பணம், மழைக்காலத்தில் ஒரு தகர டப்பாவில் வைத்து இருந்ததால், கரையான் உள்ளே சென்று காகித நோட்டுகளை அரித்துவிட்டது. இதை பார்த்த முத்துக்கருப்பி கதறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் பலரும் மனமுடைந்தனர்.

இந்த வீடியோ ராகவா லாரன்ஸ் அவர்களின் கவனத்திற்குப் போனது. அவர் முத்துக்கருப்பியை நேரில் சந்தித்து, ஒரு லட்சம் ரூபாயை உதவியாக வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோவுடன் பகிர்ந்துள்ள ராகவா லாரன்ஸுக்கு, ரசிகர்கள் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top