Connect with us

“தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘Ayalaan – Part 2’ படத்தின் வேலைகள்! வெளியான அறிவிப்பு!”

Cinema News

“தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘Ayalaan – Part 2’ படத்தின் வேலைகள்! வெளியான அறிவிப்பு!”

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. தற்போது கூட ‘இந்தியன் 2’ உள்பட ஒரு சில இரண்டாம் பாகம் திரைப்படங்கள் தயாராகி வருகிறது. இந்தநிலையில் முதல் முதலாக சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில், AR ரகுமான் இசையில் உருவான ’அயலான்’ என்ற திரைப்படம் சமீபத்தில் பொங்கல் விருந்தாக வெளியானது. இந்த படம் 50 கோடி வசூல் என்ற சாதனையை செய்து அதற்கு மேலும் தற்போது தொடர்ந்து வசூல் ஆகி வருகிறது.

இந்தநிலையில் இந்த படத்திற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிபுரிந்த PhantomFX என்ற நிறுவனம் தற்போது ’அயலான்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து சிவகார்த்திகேயனின் முதல் இரண்டாம் பாகம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’அயலான்’ படத்தை தயாரித்த KJR ஸ்டூடியோ மற்றும் PhantomFX நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. முதல் பாகம் போகவே இரண்டாம் பாகத்திலும் கிராபிக்ஸ் பணிகள் அபாரமாக இருக்கும் என்றும் ரசிகர்களை கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top