Connect with us

“லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டது! Viral!”

Cinema News

“லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டது! Viral!”

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லால் சலாம்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ’லால் சலாம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 26ஆம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் என்றும் இந்த விழாவில் இசைப்புயல் AR ரகுமான் இசையை ரசிக்கவும் தலைவரின் குட்டி கதையை கேட்கவும் ரசிகர்கள் திரண்டு வருக என்று லைகா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

ஜனவரி 26 குடியரசு தினத்தில் மாலை 4 மணிக்கு இந்த விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதை அடுத்து ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top