Connect with us

ரஜினியின் ‘Jailer 2’ படத்தில் நயன்தாராவா? நெல்சனின் Cinematic Universe உருவாகிறதா?!

Cinema News

ரஜினியின் ‘Jailer 2’ படத்தில் நயன்தாராவா? நெல்சனின் Cinematic Universe உருவாகிறதா?!

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘ஜெயிலர் 2’ படம் விரைவில் உருவாகும் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்த பிறகு ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் சிலை கடத்தல் காரர்களிடம் தனது மகன் சிக்கி இருந்த நிலையில் அவரை மீட்டு அதன் பின் மகனையே கொலை செய்வதுடன் படம் முடிந்திருக்கும்.

இந்த நிலையில் இரண்டாவது பாகத்தில் சிலை கடத்தல்காரர்களிடம் ரஜினிகாந்த் மோதும் காட்சிகளும் அவர்களை முழுவதுமாக அழிக்கும் கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி நெல்சன் இயக்கத்தில் உருவான ’கோலமாவு கோகிலா’ படத்தின் சில கேரக்டர்களும் ‘ஜெயிலர் 2’ படத்தில் இணையும் என்றும் குறிப்பாக நயன்தாரா இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ‘ஜெயிலர் 2’படம் நெல்சனின் யுனிவர்ஸ் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தில் நடிகர் சிம்பு - இணையத்தை கலக்கும் டக்கர் புகைப்படம்..!!

More in Cinema News

To Top