Connect with us

“SK21 படத்தின் டீசரை பார்த்து மிரண்டு போன பிரபல இயக்குனர்! என்ன சொன்னார் தெரியுமா?!”

Cinema News

“SK21 படத்தின் டீசரை பார்த்து மிரண்டு போன பிரபல இயக்குனர்! என்ன சொன்னார் தெரியுமா?!”

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’SK21’. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த மாதம் சிவகார்த்திகேயன் பிறந்தநாளின் போது இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வீடியோ வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’, தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன், ’SK21’ படத்தின் டீசர் பார்த்ததாகவும் அதை பார்த்து தான் மிகவும் ஆச்சரியம் அடைந்து விட்டதாகவும் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் ஒரு புதிய வடிவில் சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என்றும் ’SK21’ படத்தின் குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

More in Cinema News

To Top