Connect with us

“தலைவர் 171க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இப்படி ஒரு கனக்சனா?! தரமான சம்பவம் Loading!

Cinema News

“தலைவர் 171க்கும் சிவகார்த்திகேயனுக்கும் இப்படி ஒரு கனக்சனா?! தரமான சம்பவம் Loading!

சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனாலும், கமல் தயாரிப்பில் நடிக்க அழைத்ததுமே உடனடியாக ஓகே சொல்லி விட்டு நடித்தார். அனைத்து பெரிய நடிகர்களையும் மதித்து நடக்கக் கூடிய நடிகராகவே சிவகார்த்திகேயன் உள்ளது அவரது சிறப்பான குணங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் நடித்து வருகின்றனர்.

ராணுவ வீரர் ஒருவரின் கதையை மையமாக வைத்து அந்த படம் தயாராகி வருகிறது. டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் ரஜினியை வைத்து இயக்கிய ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயன் சிவராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானதுமே ரஜினிக்கு மகனாக சிவா தான் நடிக்கிறார் என வதந்திகள் பரவின.

ஆனால், அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என சிவகார்த்திகேயன் விளக்கம் கொடுத்திருந்தார். தரமணி படத்தின் நாயகன் வசந்த் ரவி ரஜினிக்கு மகனாக நடித்திருந்தார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 படத்தில் முதலில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதியை லோகேஷ் அணுகியதாகவும் அவர் மறுத்து விட்ட நிலையில், லாரன்ஸை அணுகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும், ரஜினிக்கு துணையாக பல மல்டி ஸ்டாரர்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ள லோகேஷ் கனகராஜ் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக கூறுகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குஜராத் மண்ணில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு - கடின இலக்கை கொடுக்குமா குஜராத்..!!

More in Cinema News

To Top