Connect with us

தக் லைப் படத்தில் குஷ்பு மகள் பணியாற்றியதைப் பார்த்தீர்களா? குஷ்புவின் உருக்கமான நன்றி..

Featured

தக் லைப் படத்தில் குஷ்பு மகள் பணியாற்றியதைப் பார்த்தீர்களா? குஷ்புவின் உருக்கமான நன்றி..

மணிரத்னம் இயக்கத்தில் நேற்று வெளியான லைஃப் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தப் படத்தில் கமல் ஹாசன், சிம்பு, திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை குஷ்பூ தனது மகள் அனந்திதா சுந்தர் குறித்த தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் உதவி இயக்குநராக அனந்திதா சுந்தர் பணியாற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார். சில நாட்கள் அந்தப் படப்பணியில் ஈடுபட்ட அனந்திதா, ஒரு காலையில் ஏற்பட்ட எலும்பு முறிவினால் பணியிலிருந்து விலகியதாகவும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

இருப்பினும், படத்தில் தனது மகளின் பெயரை மறக்காமல் குறிப்பிடப்பட்டதற்காக இயக்குநர் மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்து, அதனை உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவு செய்துள்ளார் நடிகை குஷ்பூ. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோர விபத்தில் சிக்கிய ‘குட் பேட் அக்லி’ நடிகர் ஷைன் டாம் சாக்கோ – தந்தை உயிரிழந்த சோகம்..

More in Featured

To Top