Connect with us

வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதா? காரணம் இதுதான்! ரசிகர்கள் அதிர்ச்சி..

Featured

வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதா? காரணம் இதுதான்! ரசிகர்கள் அதிர்ச்சி..

அறிவிக்கப்பட்டு நீண்ட நாட்கள் கடந்தும், இயக்குனர் வெற்றிமாறனும் நடிகர் சூர்யாவும் இணையும் எனக் கூறப்பட்ட ‘வாடிவாசல்’ படம் இன்னும் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கிறது. தொடர்ந்து இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து இருந்து வந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பல்வேறு பேட்டிகளில் “படம் விரைவில் தொடங்கும்” என்று குறிப்பிட்டாலும், இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. இந்நிலையில் தற்போது ‘வாடிவாசல்’ படம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதற்கிடையில் நடிகர் சூர்யா, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கிய வெங்கி அட்லுரியின் இந்த புதிய படத்துக்காக சூர்யா தனது தேதிகளை ஒதுக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.

இதனால், சூர்யா தற்போது ‘வாடிவாசல்’ படத்திற்கு தேதிகள் ஒதுக்க இயலவில்லை எனவும், இதனையே காரணமாக வைத்து ‘வாடிவாசல்’ படம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இயக்குனர் வெற்றிமாறன், அதே தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய சந்தானம் – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

More in Featured

To Top