Connect with us

நடிகர் விஜயின் அடுத்த நகர்வு.. ஆதரவு தர வலியுறுத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்

Keerthy_Suresh_Vijay

Cinema News

நடிகர் விஜயின் அடுத்த நகர்வு.. ஆதரவு தர வலியுறுத்திய நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த பிறகு, அது குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு சேவை செய்து வந்த விஜய் மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றுவதாக நடிகர் விஜய் கடந்த வாரம் அறிவித்தார்.

மேலும், 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சியின் சின்னம், கொடி மற்றும் கொள்கைகளை அறிவித்து மக்களை சந்திக்க உள்ளதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலே தனது இலக்கு என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு முழுநேரமாக அரசியலில் ஈடுபடுவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சைரன் படத்தின் புரமோஷனில் ஈடுபட்டுள்ள நடிகை கீர்த்தி சுரேஷிடம் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய் நமக்கு பல தரமான படங்களை கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும், விஜயின் அடுத்த கட்டம் அரசியல் என்றும், அதற்கு நாம் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  என் திருமணத்தை பார்க்க உங்களுக்கு அவ்ளோ அவசரமா - நடிகை மாளவிகா மோகனன் செம கலாய்..!!

More in Cinema News

To Top