Connect with us

அறம் பட இயக்குனரின் அடுத்த படைப்பு..வடசென்னையின் முக்கிய கதை!

Cinema News

அறம் பட இயக்குனரின் அடுத்த படைப்பு..வடசென்னையின் முக்கிய கதை!

கோபி நயினார் இயக்கத்தில் ஜெய்,ஐஸ்வர்யா ராஜேஷ்,ஜேடி சக்கரவர்த்தி நடிக்கும் ‘கருப்பர் நகரம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது…இது இப்போது நன்கு பேசப்பட்டு வருகின்றது…

நயன்தாரா நடிப்பில் முக்கியமான படம் தான் அறம்…இந்த படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார்…இவரின் எழுத்துக்கு பலரும் ரசிகர்கள் தான்…அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மனுஷி’ என்ற படத்தை இயக்கினார்.வெற்றிமாறன் அவர்களின் Gross Root நிறுவனம் தயாரித்த அந்தப் படம் பற்றிய தகவல் பின்னர் வெளியாகவில்லை…அந்த படம் பற்றி யாரும் அதன் பின் ஏதுவும் சொல்லவில்லை…

இந்த நிலையில் கோபி நயினார் இயக்கும் அடுத்தப் படத்துக்கு கருப்பர் நகரம் என தலைப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்றது…இதில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தலைப்பு அறிவிப்பு போஸ்டர் சில தினங்கள் முன்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.டீசர் 1.28 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் பல முக்கிய நிகழ்வுகள் நடக்க போகிறது என்பதை சொல்லும் விதமாக காட்சிகள் அமைந்து இருக்கின்றது..இந்த வீடியோ செம ட்ரெண்ட் ஆகி உள்ளது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோர விபத்தில் சிக்கிய நடிகர் மேத்யூ தாமஸின் குடும்பம் - நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்..!!

More in Cinema News

To Top