Connect with us

ஜிகர்தண்டா Double X படத்தை கொண்டாடிய தனுஷ்…கலக்கிட்டீங்க கண்ணா!

Cinema News

ஜிகர்தண்டா Double X படத்தை கொண்டாடிய தனுஷ்…கலக்கிட்டீங்க கண்ணா!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது…வந்தது முதல் வரவேற்பு அதிகமாக இருந்து வருகின்றது..நாளை இப்படம் வர இருக்கின்றது..அதனால் இப்போது படத்தின் ஹைப் ஏற்ற வீடியோ பாடல் கூட வெளியிட்டு இருந்தனர்…முதல் review இப்போது வந்து இருக்கின்றது…

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது…பலரும் இப்படத்தை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்…

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார்…இவருக்கு நிறைய நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது…இந்நிலையில் படத்தை பற்றி ஒருவர் புகழ்ந்து இருக்கின்றார்..

அதாவது நடிகர் தனுஷ் அவர்கள் இப்படத்தை பாராட்டி இப்போது ட்வீட் போட்டு படத்தின் எதிர்பார்ப்பை அதிக படுத்தி இருக்கின்றார்,அதாவது படம் சிறப்பாக இருக்கின்றது..நடிப்பாராகன் எஸ் ஜெ சூர்யா எப்போதும் போல மிரட்டல் ,லாரன்ஸ் சூப்பராக செய்துள்ளார்…சந்தோஷ் நாராயணன் சிறப்பு தான் என கொண்டாடி இருக்கின்றார் அவர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்லைன் சூதாட்டத்தால் 6 மாதங்களில் 8 பேர் பலி - உடனடி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top