Connect with us

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! கார்த்தியின் சர்தார் 2 அப்டேட் வந்தாச்சு!

Featured

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! கார்த்தியின் சர்தார் 2 அப்டேட் வந்தாச்சு!

நடிகர் கார்த்தி கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து, நல்ல ஹிட் பார்த்தார். அதன்பிறகு, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான சர்தார் படம் கூட பிரமாண்ட வெற்றி பெற்றது.

இந்த படம் தண்ணீர் மாஃபியாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ். லக்‌ஷ்மன் குமார் தயாரித்த இப்படத்தில், கார்த்தியுடன் ராஷிகண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்தனர். சர்தாரின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இப்போது, சர்தார் 2 குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் இன்று காலை மைசூரில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், படத்தின் பாடல் காட்சிகள் பேங்காக் மற்றும் சென்னையில் படமாக்கப்பட உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி வரும் நாட்களில் படத்தின் குறித்த மேலும் பல அப்டேட்கள் வெளிவரக்கூடும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Thalaivar 173 அப்டேட் – ஏப்ரல் ஷூட்டிங் குறித்து சிபி சக்ரவர்த்தி கூறியது

More in Featured

To Top