Connect with us

கமல்ஹாசனின் அடுத்த படப்பிடிப்பு எப்போது? புதிய அப்டேட் வெளியானது!

Featured

கமல்ஹாசனின் அடுத்த படப்பிடிப்பு எப்போது? புதிய அப்டேட் வெளியானது!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன், உலக நாயகன் என ரசிகர்கள் அழைக்கும் அளவிற்கு பிரபலமானவர். ஆனால் சமீபத்தில், உலகநாயகன் என்ற பட்டத்தை வேண்டாம் என்று அவர் அறிவித்தார்.

கடந்த முறையாக, ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த இந்தியன் 2 படம் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. வசூலிலும் படம் தோல்வி அடைந்தது. தற்போது கமல்ஹாசன், மணி ரத்னம் இயக்கும் தக் லைஃப் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து, அவரது 237-வது படம் குறித்து மாஸ் அப்டேட் வந்துள்ளது. இந்த படத்தை பிரபல சண்டை பயிற்சியாளர்கள் அன்பு-அறிவ் சகோதரர்கள் இயக்க உள்ளனர். ஆக்சன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. படப்பிடிப்பு பணிகள், இந்த மாத இறுதியில் சென்னையில் துவங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பத்மபூஷன் விருது பெற்ற அஜித், பூரிப்பில் ஷாலினி!

More in Featured

To Top